72 சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளன என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பணிப்புறக்கணிப்பானது, இன்று(13) காலை 6 மணிமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.
இந்த விடயம் தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
இதற்கமைய, தொடர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களினது கூட்டமைப்பின் இணைப்பாளர் சானக்க தர்மவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.