ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும். அந்த அமைப்பே அவரது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் ராசிபலனை பார்க்கின்றனர்.
அந்த வகையில் நாளைய தினம் உலகம் முழுவதும் காதலர் தினத்தை கொண்டாடுகின்றனர். இந்த வருடம் காதலர் தினத்தில் அதிர்ஷ்டத்தை பெறப் போகும் ராசிகள் எவை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சுக்கிரன் காதல், திருமண சுகம், ஆடம்பரம் உள்ளிட்டவற்றைத் தரக்கூடியவர். இவர் தற்போது காதலர் தினத்திற்கு முந்தய நாளில் அதாவது 13ம் திகதி இன்று பிறபகல் கும்ப ராசியில் பெயர்ச்சி ஆகியுள்ளார்.
இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் காதல் வாழ்க்கையில் வலுவான நிலை இருக்கும். தனிமை நிலையில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
1.மேஷம்
உங்களுக்கு சூரியன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் சாதகமாக உள்ளதால் உங்கள் காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
காதலில் இனிமையை உணர்வீர்கள். நீங்கள் காதலித்து கொண்டு இருக்கிறீர்கள் என்றால் உங்கள் உறவு இந்த நாளில் வலுப்படும். உங்கள் விருப்பம் மற்றும் நீங்கள் நினைத்தவை எல்லாம் நிறைவேறும்.
திருமண வாழ்க்கையில் மனைவியுடனான உங்கள் உறவு வலுவடையும். நீங்கள் இந்த நாளில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
2.மிதுனம்
உங்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இந்த நாளில் உங்கள் துணையுடன் மனம்விட்டு பேசுவீர்கள். ஒருவருக்கொருவர் அவரவர் பேச்சுக்கு மதிப்பளிப்பீர்கள்.
உங்கள் துணையை நகைச்சுவைகள் காட்டி எந்த நேரமும் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். திருமண வாழ்கையை பற்றி தவறான புரிதலை விட்டு நல்ல எணணத்திற்கு வழிவகுப்பீர்கள்.
3.கன்னி
கன்னி ராசிக்காரர்களே இந்த கிரக பெயர்ச்சி உங்கள் உறவை வலுப்படுத்தும். காதலை புதிதாக கூறுபவர்கள் உங்களுக்கு சாதகமான சூழல் வரும்.
கணவன் மனைவியுடன் வாழ்வில் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் செயலில் ஈடுபடுவீர்கள்.
4.துலாம்
இந்த காதலர் தினத்தில் நீங்கள் உங்கள் வாழ்க்கையல் முன்னேறுவதற்கான வழி கிடைக்கும். உங்கள் துணையின் மன கருத்துக்களை புரிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் இந்த நாள்.
5.மகரம்
சூரிய சுக்கிர பெயர்ச்சியால் உங்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். புதிய வழிகளில் பணம் சம்பாதிப்பீர்கள். உங்கள் துணையை நெருங்கியவர்களுக்கு அறிமுகப்படுத்தும் சந்தர்பம் கிடைக்கும்.
காதலர் தினத்தில் நீங்கள் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். உங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.
6.மீனம்
உங்களின் வாழ்க்கையில் நேர்மறை எண்ணங்களின் ஆற்றலை கொண்டு வரும். திருமண வாழ்க்கையில் இருந்த பிணக்குகள் இல்லாமல் போகும்.
திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். உங்கள் மனைவியுடனான உறவு வலுவடையும்.