Loading...
யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியின் A9 வீதியில் அரச பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்ததுள்ளார்.
குறித்த விபத்து இன்று(14.02.2024) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை மோதிய பின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
Loading...
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து சென்ற ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளானதுடன் பேருந்தில் பயணித்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆயினும் பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...