பொதுவாகவே நீரிழிவு நோயாளிகள் உணவு தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லாவிடில் பாரிய அபாயகரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
மேலும், பழச்சாறு உள்ளிட்ட அதிகமாக சர்க்கரை அடங்கிய நீர்ம உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடில்லாமல் இருந்தால், சர்க்கரை நோய் வரும் அபாயம் இருக்கும்.
உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால், உங்கள் உணவில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும். உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை இயற்கையான முறையில் குறைக்க பல எளிமையான வழிகள் உள்ளது.
ஆய்வுகளின் அடிப்படையில் மருத்துவ குணங்கள் கொண்ட சில மூலிகை இலைகளை மென்று சாப்பிட்டால் உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கலாம்.அந்த மூன்று இலைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாகவே கற்றாழையில் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைச்திருப்பது அனைவரும் அறிந்ததே. கற்றாழையில் ஹைப்போகிளேசமிக் பண்பு இருப்பதால் இது இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.
கற்றாழை இலைகளை தினசரி வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரித்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரை இயல்காகவே குறையும். சீதாப்பழம் இலைகள் சீதாப்பழ இலைகளில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகின்றது.
மென்று சாப்பிட்டால் கணையத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க பெரிதும் துணைப்புரிகின்றது. இதனால் சுகரை எளிமையாகவும் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாமல் கட்டுக்குள் வைக்கலாம்.
வேப்பிலையில் பொதுவாக பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகின்றது. வெறும் வயிற்றில் வேப்பிலையை மென்று சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
வேப்பிலையில் காணப்படும் வேதிப்பொருட்கள் கணையதர்தில் தொழிற்பாட்டை சீர்செய்கின்றது.இதன் காரணமாக இயற்கையான செயல்முறை மூலம் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கின்றது. அதனால் இயற்கை முறையில் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.