Loading...
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது டெல்லி எய்ம்ஸ் டாக்டர்களும் வந்து சிகிச்சை அளித்தனர். அவர்கள் அளித்த சிகிச்சைகள் பற்றி தமிழக அரசு அறிக்கை கேட்டு இருந்தது.
அதை ஏற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் 5 அறிக்கைகளை இன்று தாக்கல் செய்தனர். தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் அந்த அறிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Loading...
அந்த அறிக்கைகளில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முழு விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை துணை இயக்குனர் சீனிவாஸ் இந்த 5 அறிக்கைகளையும் அளித்துள்ளார்.
Loading...