நாட்டினை தற்போது ஆட்சி செய்வது நல்லாட்சி அரசாங்கமா? அல்லது பாதாள உலக கும்பலா? என பொதுபல சேனா கேள்வியெழுப்பியுள்ளது.
குறிப்பாக சிறையில் இருக்கும் கைதிகளுக்கு பாதுகாப்பினை வழங்க முடியாத அரசாங்கம் எவ்வாறு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பு கூற முடியும், என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது நாட்டில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என மார்தட்டிக்கொள்ளும் அரசாங்கம் ஒன்றினை கவனிக்க தவறியுள்ளது.
குறிப்பாக தற்போது நாட்டில், அவர்களது ஆட்சியில் இடம்பெறும் குற்றச்செயல்களே அவர்கள் கூறும் கருத்துக்களுக்கு எதிராக உள்ளது.
மேலும் எப்போது நாட்டில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வருகின்றதோ அப்போதெல்லாம் பாதாள உலக கும்பல்கள் தலைவிரித்து ஆடுகின்றார்கள்.
இதன் காரணமாக இன்று நாட்டினை ஆளுவது நல்லாட்சி அரசாங்கமா? அல்லது பாதாள உலக கும்பலா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
இவர்களின் மீள் உருவாக்கமானது நாட்டின் நன்மைக்காக செயற்படும் அனைத்து தரப்பினருக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.