இந்தி நடிகை ஐஸ்வர்யாராய்-அபிஷேக்பச்சன் இடையே கருத்து வேறுபாடு என்று ஏற்கனவே ஒரு தகவல் வெளியானது. பின்னர் அப்படி எதுவும் இல்லை என்று கூறப்பட்டது. இப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய் மகள் ஆராதனாவை படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைக்க ஆசைப்படுகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் ஐஸ்வர்யா ராய், மகள் ஆராதனாவை படங்களில் நடிக்க வைப்பதை விரும்பவில்லை. ஊடகங்களிலிருந்து தன் குழந்தை விலகி இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது. என்று இந்தி படஉலகில் தகவல் பரவி வருகிறது.
இதுபற்றி அபிஷேக் பச்சனிடம் கேட்டபோது, “என் மகள் என்ன ஆகவேண்டும் என்பதை அவள் தான் முடிவு செய்ய வேண்டும். அவளுக்கு எது சந்தோஷமோ அதுதான் எனக்கும் சந்தோஷம். ஆனால் ஐஸ்வர்யாராய், தனது வாழ்க்கை, வேலை போன்றவற்றில் எப்படி ஆக விரும்பினோமோ அப்படி என் மகளை ஆக்க நினைக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.