Loading...
பசறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கசிப்பு அருந்திய மாணவன் ஒருவன் சுகவீனம் காரணமாக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனுக்கு நேற்று (14) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார்.
இதன்போது இது குறித்து ஆசிரியர்கள் அவரிடம் கேட்டபோது, பாடசாலைக்கு அருகே உள்ள பிரதான வீதியில் வைத்து தான் கசிப்பு அருந்தியதாக கூறியுள்ளார்.
Loading...
இதனையடுத்து குறித்த மாணவன் உடனடியாக பசறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் குறித்த மாணவன் தான் கசிப்பு அருந்தியதனை வைத்தியசாலையில் கூறியதன் அடிப்படையில் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பசறை ஆதார வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவித்தன.
Loading...