கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள பேக்கேஜ் பெல்ட் திடீரென பழுதடைந்ததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
விமான நிலைய ஊழியர்கள் குழுவொன்று தமது கடமைகளை சரிவர செய்யாத காரணத்தினால் இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நெரிசலை தவிர்க்கும் வகையில் புதிய முனையமொன்று அடுத்த 09 மாதங்களுக்குள் நிர்மாணிக்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தின் இரண்டாவது முனையக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதி அமைச்சுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.