Loading...
மனைவியின் தொலைபேசிக்கு வந்த இரண்டு அழைப்புகள் குறித்து சந்தேகம் கொண்ட கணவன் மனைவியை கோடாரியால் வெட்டியுள்ளார்.
சந்தேக நபர் மனைவி மீதான சந்தேகத்தினால் ஏற்பட்ட கோபத்தில் மனைவியை நிர்வாணப்படுத்தி, தலைமுடியை வெட்டி எறிந்து விட்டு, கோடாரியால் கொத்தியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த பெண் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Loading...
சம்பவம் தொடர்பாக கம்பளை ரன்மல்கடுவல பிரதேசத்தை சேர்ந்த சட்டத்தரணியான 51 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரிய போதிலும் மனைவி விவகாரத்து தர மறுப்பதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
Loading...