கிராமப்புறங்களில் மிக எளிதாக கிடைக்கும் அருகம்புல்லில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
இதன் பயன்கள் தெரிந்ததன் என்னவோ, நம் முன்னோர்கள் அருகம்புல்லை மருத்துவ ரீதியாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்ட அருகம்புல்லில், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதுடன் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.
நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது, ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கிறது. ஆஸ்துமா நோய்க்கு தீர்வளிப்பதுடன் வயிற்றில் அமிலத்தன்மையை குறைக்கிறது.
வாய் துர்நாற்றத்தையும், உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றத்தையும் சரிசெய்கிறது. நெஞ்சு சளிக்கு மருந்தாவதுடன் மூலத்தை குணப்படுத்தும், இதயக்கோளாறுகளை சரிசெய்கிறது.
ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக சுத்தம் செய்த பின்னர், இடிச்சு சாறு எடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர பலன்கள் ஏராளம் உண்டு.
இதனை காயம் கண்ட இடத்தில் பூசி வர காயம் குணமாகி புண் சீக்கிரம் ஆறும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் அரை கைப்பிடி அளவு அருகம்புல்லுடன் 10- 12 மிளகு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, இந்த நீரை 20 முதல் 40 நாட்கள் பயன்படுத்தி வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஒரு கைப்பிடி அளவு அருகம்புல்லை எடுத்து நன்றாக சுத்தம் செய்த பின்னர் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும், இதனை வடிகட்டிக் கொள்ளுங்கள்.
இதனுடன் தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்க்கலாம், இனிப்பு தேவைப்படாதவர்கள் மிளகுத்தூள், உப்பு சேர்த்து பருகவும்.
காலையில் வெறும் வயிற்றிலும், மாலையில் 200 மிலி அளவிலும் எடுத்துக் கொள்ளலாம்.