பிலியந்தலை இரு யுவதிகள் 10 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸில் இருந்து பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பிலியந்தல சித்தும் அல்லது சென்டா என்ற நபரின் கும்பலுடன் தொடர்புடைய 2 யுவதிகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனையின் போது, போதைப்பொருள் உட்கொள்ள வந்த மற்றும் போதைப்பொருள் உட்கொண்ட இரு இளைஞர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்
சந்தேகநபர்களுடன், 250 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள், 15 போதை மாத்திரைகள், இலத்திரனியல் தராசு, சுருட்டு சுற்றுவதற்கு பயன்படுத்தப்படும் காகிதம், 8 கையடக்கத் தொலைபேசிகள், 2 லைட்டர்கள் மற்றும் போதைப்பொருள் பொதி செய்ய செய்யப் பயன்படுத்தப்படும் பொலத்தீன் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.