பெப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த மாதத்தில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 115,328 ஆகும்.
கடந்த நாட்களில், காதலர் தினமான பெப்ரவரி 14 அன்று இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9443 ஆக காணப்பட்டதோடு கடந்த காலங்களில் பதிவான ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை இதுவாகும்.
அதேவேளை, கடந்த 15 வாரங்களில், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.
மேலும், ரஷ்யாவிலிருந்து 16,701 சுற்றுலாப் பயணிகள் கடந்த 15 வாரங்களுக்குள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.