Loading...
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவிற்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதாக வெளியான தகவலை மஹிந்த ராஜபக்சவின் அலுவலகம் இன்று முற்றாக மறுத்துள்ளது.
மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு வலஹாஹெங்குணாகே தம்மாரத்ன தேரர், முன்னாள் முதல் பெண்மணி பல ஓய்வூதியங்களையும் அரசாங்க கொடுப்பனவுகளையும் பெற்று வருவதாக அண்மையில் பரபரப்பான தகவலொன்றை தெரிவித்திருந்தார்.
Loading...
எனினும் தேரரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், முன்னாள்அதிபரின் அலுவலகம், தம்மரதன தேரர் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு கூறியுள்ளதாகவும், எனவே இந்தக் கூற்றுக்கள் கடுமையாக நிராகரிக்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளது.
Loading...