பொரளை மகசீன் சிறைச்சாலைக்கு முன்பாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி ஒருவரே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் வாடகை அடிப்படையில் வசிக்கும் 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன், அவர் சில நாட்களுக்கு முன்னர் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டு பிணையில் வந்தவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் பொரளை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.