நடிகர் விஜயின் மகன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் முதல் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் யார் என குறித்த தகவல் இணயைத்தில் கசிந்துள்ளன.
தென்னிந்திய திரையுலகில் முண்ணி நடிகராக இருந்து வருவபர் நடிகர் விஜய். இவர் குழந்தையாக இருக்கும் போதே சில திரைப்படத்தில் நடித்து வந்தார்.
இவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள்.
இவரது மகனான சஞ்சய் சினிமாவில் மிக ஆர்வமாக இருப்பதால், அதை பற்றி மேலும் படித்துக்கொள்ள அமெரிக்கா அனுப்பி வைத்தார்.
அதை படித்து முடித்த நிலையில் அவரது இயக்கத்தில் புதிய படம் வரவிருப்பதாக லைகா நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் குறித்து தெரியவந்துள்ளது.
ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் துல்கர் சல்மான் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
துல்கர் சல்மான் மலையாளம், தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழியிலும் நல்ல அறிமுகத்தை பெற்றுள்ளார்.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கும் சூர்யாவின் படத்திலும் துல்கர் சல்மான் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர் ஜேசன் விஜய் படத்தில் நடிக்கலாம் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.