பொதுவாக மனிதர்களின் ஆளுமை, நடத்தை மற்றும் குணாதிசயங்கள் என்பன அவர்கள் பிறந்த ராசியை பொறுத்தே அமைகின்றது என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள்.
வாழ்வில் அனைத்தையும் இழந்தாலும் கூட தன்னம்பிக்கை இருந்தால் மீண்டும் அந்த இடத்தை அடையலாம். அதற்கு நினைத்ததை நடத்தி முடிக்கும் பிடிவாத குணமும் முக்கியமாகின்றது.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் சில ராசியினர் இயல்பாகவே பிடிவாத குணம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியினர் இயல்பாகவே மிகவும் தைரியமும் உறுதியும் உடையவர்கள். இவர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தவுடன், அதைச் செய்து முடித்துவிடுவார்கள். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், அவர்களின் பிடிவாத குணம் அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது.
ரிஷபம்
ரிஷபம் ராசியினர் பொதுவாக தங்கள் நோக்கங்களில் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள்.
எந்த ஒரு வேலையைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாலும் அதை முடித்த பின்னரே அமைதியடைவார்கள். அது வரை அதை பற்றியே அவர்கள் சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்.
சிம்மம்
சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசியினர் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் இருப்பார்கள்.அவர்களின் நம்பிக்கை அவர்களின் முகத்தில் தெளிவாகத் தெரியும்.
அவர்களின் தன்னம்பிக்கை அவர்களை முன்னோக்கி செல்ல தூண்டுகிறது, இது அவர்களை பிடிவாதமாக ஆக்குகிறது. இந்த குணம் அவர்களை வெற்றியாளர்களாக மாற்றுகின்றது.