பழங்களில் ஏராளமான நன்மைகள் ஒளிந்து கிடக்கின்றன. நாம் எந்த பழத்தை உண்டாலும் அது கட்டாயம் நமது உடலில் ஒரு நன்மையை தரும்.
நோய்களை குணமாக்க உதவும். ஒவ்வொரு பழத்திலும் உள்ள வெவ்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை நாம் எமது உடலுக்கு ஏற்ற வகையில் உண்ணலாம்.
அந்த வகையில் சீதாப்பழம் மிகவும் ஆரோக்கியமானது. இந்த பழத்தில் வைட்டமின் B, C, மக்னீசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கனிமச்சத்தும் அடங்கியுள்ளன.
இந்த சீதாப்பழத்தை உண்பதால் உடலுக்கு என்ன என்ன நன்மை கிடைக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1. மனிதனை கொன்று தின்ன கூடிய பல நோய்களை அதாவது மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களை இந்த சீதாப்பழம் தடுத்து அதற்கு ஒரு நிவாரணியாக உள்ளது.
இந்த பழத்தில் அதிகமான ஆண்டி ஆக்சிடென்ட்கள் காணப்படுவதால் இது குடலில் உள்ள நச்சுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றும்.
இதில் மக்னீசிய சத்துக்கள் அதிகமாக உள்ளதால் இது மூட்டு வலிகள் முழங்கால் வலி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணப் பழமாக விளங்குகிறது.
2. அல்சர் நோய் இருப்பவர்கள் சீதாப்பழத்தை உண்ணலாம். காலையில் வெறும் வயிற்றில் இந்த சீதாப்பழத்தை சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் அமிலத்தன்மையை போக்கி குடல் புண்ணை குணப்படுத்தும்.
அதிக பித்தப் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் ஒரு சீதாப்பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.
3. சர்க்கரை நோய் இருப்பவர்கள் இந்த சீதாப்பழத்தின் இலைகளை மருந்தாக பயன்படுத்தலாம். இந்த இலைகளில் அதிக ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், இருப்பதனால் இது உடலில் இருக்கும் வெள்ளை ரத்த அணுக்ககை சீராக வைத்துக்கொள்ளும்.
இந்த இலைகளை தண்ணீரில் ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் ரத்தத்தில் இருக்கும் சக்கரை அளவை குறைக்கலாம்.
வெள்ளை ரத்த அணுக்கள் உடலில் கூடுதலாக இருந்தால் அது புற்று நோயை எதிர்த்து போராட உதவும். எனவே இது புற்று நோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.