இலத்திரனியல் புகையிலை (E-Cigarettes) பயன்பாடு காரணமாக கண்கள் மற்றும் மூளையில் கடுமையான விளைவுகள் ஏற்படுவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
பல்வேறு வகையான பழங்களின் வாசனை வெளிப்படும் வகையில் தயாரிக்கப்படும் இலத்திரனியல் புகையிலை தொடர்பில் பெற்றோர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் புகையிலையுடன் சந்தேகநபர் ஒருவர், மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் பேலியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேகநபரிடம் இருந்து ஸ்மார்ட் வோட்ச் என்ற நவீன ரக கைக்கடிகாரம் போன்று தயாரிக்கப்பட்ட இலத்திரனியல் புகையிலை மீட்கப்பட்டுள்ளது.
கடந்த சில காலமாக இணையத்தளம் ஊடாக குறித்த நபர் இந்த கடத்தலை மேற்கொண்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.