தாயின் வயிற்றில் இருந்து இந்த உலகத்திற்கு அறிமுகமாகும் குழந்தைகளை நாம் ஒரு வயது வரைக்கும் தொட்டிலில் உறங்க வைக்கலாம்.
குழந்தைகள் தாயின் அருகாமையை எப்போதும் விரும்புவார்கள். தாய் அரவணைத்தால் மட்டுமே நிம்மதியாகவும் உற்சாகமாகவும் உறங்குவாாகள்.
குழந்தைகள் சிறுபிள்ளை பருவத்தில் இருந்தே படுத்து உறங்குவதற்கு தனியான ஒரு இடம் கொடுக்க வேண்டும் என்று வைத்தியர்கள் பெற்றோர்களை ஆலோசிப்பார்கள்.
அந்த வகையில் குழந்தைகளை தனியாக உறங்க வைப்பது சரியா? தவறா ? என்பதை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குழந்தைகள் நான்கு வயது ஆகும் வரை அவர்கள் அவர்களின் பெற்றோர்களுடன் உறங்குவதே சரியானது.
இப்படி ஒன்றாக சேர்ந்து உறங்கினால் அது அவர்களின் ஒழுங்குணர்வை மேம்படுத்துகிறது. இந்த நேரத்தில் தான் அவர்களுக்கு தன்நம்பிக்கையும் மன அமைதியும் கிடைக்கும்.
இதன்போது நிம்மதியான உறக்கத்தை பெறுகிறார்கள். 4 இலிருந்து 5 வயதாகும் போது தான் குழந்தைகள் தனியாக உறங்க வேண்டும்.
இந்த வயதில் பிள்ளைகளுக்கு தனியறை வழங்கும்போது அவர்களின் பொறுப்புணர்வு அதிகரிக்கிறது. சிறுவயதில் இருந்தே அவர்கள் சுதந்திரமான வாழ்கையை அனுபவிக்க பழகுவார்கள்.
இது அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த உதவும்.எனவே 4 முதல் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளையே தனியாக உறங்க வைக்க வேண்டும்.