வீட்டில் எந்த பொருட்களை எங்கே வைக்க வேண்டும் என்பதை வாஸ்து சாஸ்திரம் எமக்கு அழகாக காட்டி தந்துள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தின் கொள்கைகளின்படி ஒவ்வொரு கலைப்பொருளையும் வைத்திருப்பது உங்கள் வாழ்க்கைத் தரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில் சுவைக்காக பயன்படுத்து உப்பை நீங்கள் குளியலறையில் வைத்தால் பல நன்மைகள் கிடைக்கும் என வாஸ்து சாஸ்திரப்படி கூறப்படுகின்றது.
குளியலறை என்பது நாம் அதிகம் பயன்படுத்தும் வாழ்கையின் ஒரு முக்கிய அங்கமாகும். இந்த இடத்தில் இருந்து தான் வீட்டிற்று எதிர்மறையான நேர்மறையான விஷயங்கள் உருவாகின்றன.
அந்த வகையில் உப்பு எதிர்மறையான விஷயங்களை தடுக்க கூடியது. அதனால் தான் வாஸ்து சாஸ்திரத்தின் படி குளியலறையில் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் உப்பை வைத்தால் அது வீட்டில் பல நன்மைகளை தரும் என கூறுகின்றது.
உப்பு நீரில் குளித்தால் தோஷங்கள் நீங்கும் என்பது போல குளியலறையில் உப்பு வைத்தால் வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்கும் என நம்பப்படுகின்றது.
வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த குளியலறை வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றலாம்.
இதற்கு நீங்கள் ஒரு பித்தளை பாத்திரத்தில் உப்பை போட்டு குளியலறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைக்க வேண்டும். ஆனால் நன்றாக நினைவு வைத்து கொள்ளுங்கள், இந்த உப்பு பாத்திரத்தை யாரும் கையால் தொட கூடாது.
ஆனால் உப்பை அவ்வப்போது மாற்றி கொள்ள வேண்டும். இந்த காரியத்தை நீங்கள் செவ்வாய் அல்லது சனிக்கிழமையன்று செய்யலாம்.
சனிக்கழமையன்று சனியை வணங்கி உப்பு வைத்தால் அது சனியை சாந்தப்படுத்தும். இதன்போது எதிர்மறை ஆற்றல் உங்கள் வீட்டிற்குள் வருவதை தடுக்கலாம்.