பொதுவாகவே ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய ராசிக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறங்கள் மற்றும் துர்திஷ்டத்தை ஏற்படும் நிறங்கள் என வெவ்வேறாக காணப்படுகின்றது.
அது குறிப்பிட்ட ராசியினரின் வாழ்வில் தாக்கம் செலுத்தும் எனவும் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் கன்னி ராசியினருக்கு துர்திஷ்டத்தை ஏற்படுத்தும் நிறங்கள் தொடர்பிலும் அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறங்கள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
கிரகங்களைப் போலவே, வண்ணங்களுக்கும் நம் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றும் சக்தி கொண்டவையாக காணப்படுகின்றது.
நாம் குறிப்பிட்ட சில நிறங்களில் ஆடை அணியும் நாம் கொஞ்சம் வித்தியாசமாக ஒளிர்வதை அவதானித்திருப்போம்.
அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறங்கள்
நீல நிறம் : அந்த வகையில் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறங்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பது நீலம்.
நீல நிறம் ஒரு நபரின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதுடன் இலக்குகளை நோக்கிச் செல்வதற்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றது.
குறிப்பாக கன்னி ராசியினருக்கு மன உளைச்சல் அல்லது கவலைகளில் இருந்து விடுவிடுபட துணைப்புரிகின்றது. மேலும் மன அமைதியை கொடுக்கின்றது.
வெள்ளை நிறம்: கன்னி ராசிக்காரர்கள் தகவல் தொடர்பு விஷயத்தில் வல்லுநர்கள் என்று கூறப்படுகிறது. வெள்ளை நிறம் மனதில் இருந்து அனைத்து தேவையற்ற எண்ணங்களையும் நீக்குவதுடன் நேர்மறை ஆற்றவை ஈர்க்கவும் துணைப்புரிகின்றது.
பச்சை நிறம்: கன்னி ராசியினருக்கு சக்தியின் நிறமாக விளங்குகிறது. புதன் கன்னி ராசிக்கு புத்திசாலித்தனம் மற்றும் பச்சை நிறம் தொடர்பான தகவல் தொடர்பு ஆகியவற்றை ஆசீர்வதிக்கிறது.
கன்னி ராசிக்காரர்களுக்கு பணத்தை ஈர்க்கும் அதிர்ஷ்ட நிறங்களில் ஒன்று பச்சை, அவர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் நிதி செழிப்பு ஆகியவற்றின் சக்தியை அளிக்கிறது.
துரதிர்ஷ்டம் கொடுக்கும் நிறங்கள்
ஊதா நிறம்: மற்றவர்கள் விலையுயர்ந்த மற்றும் சக்திவாய்ந்ததாக தோற்றமளிக்க ஊதா நிறத்தை அணியும்போது, கன்னி ராசிக்காரர்கள் இந்த நிறத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.
ஏனென்றால், இது கன்னியின் ஆற்றலை சமநிலையில்லாக்கி, அவர்களின் இலக்குகள் மற்றும் லட்சியங்களில் இருந்து அவர்களை திசை திருப்புகிறது.
சிவப்பு நிறம்: பொதுவாக, நாம் சிவப்பு நிறத்தை ஆபத்து மற்றும் அச்சுறுத்தலுடன் தொடர்புபடுத்துகிறோம்.
இந்து சாஸ்திரத்தில் மட்டுமல்லாது மேற்கத்திய மற்றும் சீன ஜோதிடமும் இந்த நிறம் எதிர்மறையான அதிர்வுகளை ஏற்படுத்தும் இதனால் இந்த நிறங்களை கன்னி ராசியினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிடுகின்றனர்.