புரதச்சத்து நிறைந்த உணவான முட்டையை பச்சையாக சாப்பிடுவதால் என்ன பிரச்சினை ஏற்படும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
புரதச்சத்து நிறைந்த உணவாக இருக்கும் முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால், உடம்பிற்கு தேவையான புரதம் கிடைக்கின்றது.
இதில் புரத சத்தை தவிர, வைட்டமின் டி, வைட்டமின் பி12 மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவை உள்ளன.
பச்சை முட்டையை குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று கூறப்படுகிறது. மேலும் பச்சை முட்டையை குடிப்பதால் சில பிரச்சனைகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
ஏனெனில் பச்சை முட்டைகளில் சால்மொனெல்லா பாக்டீரியா இருப்பதால், வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்ற பிரச்சினையை ஏற்படுத்தும்.
மேலும் பச்சை முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரதங்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அவ்வாறு குடிக்க வேண்டும் என்றால் முட்டையை நன்றாக கழுவிக் கொள்ளவும். புதிய முட்டையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பச்சை முட்டையை விட வேகவைத்த முட்டையை சாப்பிடுவது நல்லது.வேகவைத்த முட்டையில் உள்ள சத்துக்கள் எளிதில் ஜீரணமாகும். மேலும் பச்சை முட்டையை குடிப்பது பற்றின சந்தேகம் இருந்தால் உங்களது மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்.