உடல் எடை அதிகரிப்பு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும்.
இதற்கு சரியான உறக்கம் இல்லாதது, தேவையில்லாத நேரத்தில் அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், உடல் எடையை சட்டுன்னு குறைக்க இந்த சுரைக்காய் சூப் பெரிதளவில் பயனுள்ளதாக இருக்கும்.
இதை எப்படி தயாரிப்பது என்றும், இதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விரிவாக காணலாம்.
தேவையான பொருட்கள்
சுரைக்காய்- 1
தக்காளி- 1
சீரகம்- ¼ ஸ்பூன்
மிளகுதூள்- 1 ஸ்பூன்
கொத்தமல்லி- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் குக்கரில் நறுக்கிய தக்காளி மற்றும் சுரைக்காய் சேர்த்து தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து அதை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம் போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றவும்.
இதனைத்தொடர்ந்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதித்ததும் மிளகுத்தூள், உப்பு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து கிளறவும்.
அவ்வளவுதான் அடுப்பை அனைத்து இறக்கி பரிமாறினால் உடல் எடையை குறைக்க சத்தான சுரைக்காய் சூப் தயார்.
கிடைக்கும் நன்மைகள்
சுரக்காய் சூப் தினசரி குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். எனவே நாள் முழுவதும் நீரேற்றத்துடன் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
மேலும் சுரைக்காய் சூப் குடிப்பதால் உங்கள் சருமம் பொலிவு பெறும்.
சுரைக்காய் சூப் குடிப்பதால் அதிக நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும். இதனால் நீங்கள் கூடுதலாக உணவு எடுத்துக்கொள்வது தடுக்கப்பட்டு உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
மேலும் தினசரி சுரைக்காய் சூப் குடித்தால் மன அழுத்தம் குறைவதாகவும் சொல்லப்படுகிறது.