பொதுவாக வயதான பிறகு தான் மூட்டில் தேய்மானம் உண்டாகும் ஆனால் தற்போது இளம் வயதினரும் மூட்டு வலி பிரச்சினையால் பாதிப்படைகிறார்கள்.
எலும்பின் நடுவில் இருக்கும் மூட்டுகளில் தேய்மானம் உண்டாகும் போது வலி உண்டாக்க கூடும்.
இந்த மூட்டு வலிக்கு நிரந்தரமாக தீர்வு காண மருத்துவர் ரோமிகா ஒரு மூலிகை பொடியை பகிர்ந்துள்ளார்.
மூலிகை பொடியை எப்படி தயாரிப்பது?
மஞ்சள் பொடி- 60g
பட்டை பொடி- 60g
மிளகு பொடி- 20g
பறங்கி பட்டை சூரணம்- 40g
அஸ்வகந்தாதி சூரணம்- 40g
நாவல்பழ கொட்டை- 30g
சீந்தீல் சூரணம்- 40g
திரிபலா சூரணம்- 10g
பெருங்காய பொடி- 10g
தசமூலா சூரணம்- 10g
பிரண்டை உப்பு- 5g
கருப்பு உப்பு- 5g
இந்த பொடிகள் அனைத்தையும் கலந்து ஒரு டப்பாவில் சேகரித்து வைக்கவும்.
இந்த பொடியை காலையில் 8 மணிக்கு 5g அளவிற்கு எடுத்து தேன் அல்லது தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இதை குடித்த பின்னர் பால் அல்லது மோர் குடிக்கலாம்.
மாலையில் 6 மணி அளவில் 5g அளவிற்கு எடுத்து அதனை இஞ்சி சாறில் கலந்து குடித்து வரலாம்.
தொடர்ந்து 30 நாட்கள் இந்த மூலிகை பொடியை குடித்து வர மூட்டு வலிக்கு நிரந்தரமாக தீர்வு காணலாம்.