இந்திய உணவுகளில் பெரும்பாலான உணவுகளில் பயன்படுத்தப்படும் வெங்காயம் பல மருத்துவ குணங்கள் கொண்டது. இதனை பச்சையாக சாப்பிட்டால் பல நன்மைகளை பெறலாம்.
வெங்காயத்தில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கின்றது. மேலும் இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கின்றது.
பச்சை வெங்காயத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. வெங்காயம் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதுடன், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. இரத்த அழுத்த அபாயத்தையும் குறைக்கின்றது.
வெங்காயத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம், மாங்கனீஸ், தாமிரம் நிறைந்துள்ளது. இந்த கூறுகள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் முக்கியம். வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் நரம்பு சம்பந்தமான நோய்கள் வரும் அபாயம் குறைகிறது.
வெங்காயம் உடலில் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
பச்சை வெங்காயத்தில் நிறைய நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது, உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது. நார்ச்சத்து மலச்சிக்கல், மூல நோய் பிரச்சனையை குறைக்கிறது.
வெங்காயம் எலும்புகளை பலப்படுத்துகிறது. கால்சியம் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கிறது.
ஆனால் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் தீமைகளும் உண்டு. வெங்காயத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், வெங்காயம் சரியாக ஜீரணிக்கப்படாவிட்டால் அமிலத்தன்மை பிரச்சனைகள் ஏற்படும்.