பொதுவாக எந்த உணவுப்பொளாக இருந்தாலும் அது ஒருசில தினங்களில் பழுதடைந்துவிடும் உலகில் பழுதடையாத ஒரே உணவுப்பொருள் தேன் தான்.
தேன் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது. தேனை தானும் கெடாது, தன்னைச் சேர்ந்தவர்களையும் கெடுக்காது என்று சொல்வார்கள்.
இதனாலேயே ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் தேன் மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. பல்வேறு நோய்களுக்கு அரும் மருந்தாக காணப்படும் தேன் உடலுக்கு மிகவும் நல்லது.
உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்குவகிக்கும் தேன் ஏன் பழுதடைவதில்லை என எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
தேன் எத்தனை ஆண்டுகளானாலும் சுவை மணம் மாறாமல் புதிது போல் இருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேனீக்கள் பூக்களில் இருந்து எடுக்கும் வளவளப்பான மற்றும் இனிப்பான பொருளை கொண்டே தேனை உற்பத்தி செய்கின்றன. இவ்வாறு தேனீக்கள் சேகரிக்கும் தேனில் தண்ணீரின் அளவு மிகவும் குளைவாகவே இருக்கின்றது.
தண்ணீர் போதியளவு இல்லாத பட்சத்தில் அந்த இடத்தில் பக்டீரியாக்களினால் பல்கிபெருக முடியாது. இதன் காரணமாகவே தேனில் பக்டீரியாவினால் வாழ முடிவதில்லை பக்டீரியா பெருகாத பட்சத்தில் உணவு பழுதடையாது. அதனால் தான் தேன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெடாமல் இருக்கின்றது.
மேலும் தேனீக்கள் தேனை சேகரிக்கும் போதே நுண்ணுயிர் எதிர்ப்பி (antibiotics) ஒன்றை தேனில் உற்செலுத்தி விடுகின்றது. இதனால் 3000 ஆண்டுகளுக்கு மேலும் தேன் பழுதடையாமல் புதிது போலவே இருக்கின்றது.
ஆனால் தற்போது சந்தையில் விற்பனையாகும் தேன் போத்தல்களில் காலவதி திகதி குறிப்பிடப்படுகின்றது. இதற்கு காரணம் விற்பனை தந்திரம் மாத்திரமே ஆகும். அல்லது இது சுத்தமான தேனாக இருக்காது.
உண்மையில் சுத்தமான தேன் பழுதடைவதில்லை காலாவதி ஆவதும் கிடையாது. அந்த வகையில் கிராம புரங்களில் தேன்கூடுகளில் இருந்து எடுக்கப்படும் தேன் மட்டுமே சுத்தமானது.