சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஸ்டாட்லர் நிறுவனம் உருவாக்கிய ஐதரசன் எரிபொருள் பயணிகள் தொடருந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தொடருந்தானது தொடர்ந்து 2 நாட்கள் நிற்காமல் பயணம் செய்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளது, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வர்த்தக கண்காட்சியில் ஸ்டாட்லர் நிறுவனம் அறிமுகப்படுத்திய தொடர்ந்தே இவ்வாறு கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.
பல கட்ட சோதனைகளுக்குப் பின் ஒரு முறை முழுமையாக ஐதரசன் தாங்கி நிரப்பப்படுவதன் மூலம் 1,741 மைல்கள் (2,803 கிலோ மீட்டர்) பயணம் செய்துள்ளது.
அதன்படி, கடந்த 20-ஆம் திகதி மாலை தொடங்கிய இந்த பயணமானது இரவு மற்றும் அடுத்த நாள் முழுவதும் என தொடர்ந்து 46 மணி நேரம் இயங்கியுள்ளது.
இது குறித்து ஸ்டாட்லர் நிறுவனத்தின் துணைத் தலைவரான டொக்டர். அன்ஸ்கர் ப்ரோக்மேயர் கூறுகையில், இந்த உலக சாதனையானது எங்கள் ஐதரசன் எரிபொருள் தொடருந்தின் சிறந்த செயற்திறனை காட்டுகிறது.
இது மகத்தான சாதனை என்றும், இன்னொரு உலக சாதனையை படைத்ததில் நாங்கள் பெருமை அடைகிறோம் என்றும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.