கொழும்பில் உள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
ஊவாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அதிபர் ரணில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது 2 மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் அதிபர் மேலும் தெரிவிக்கையில், “பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம், இதன் அடிப்படையிலேயே அந்த மக்களுக்கு காணி வழங்குவதற்கான தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில், அரசியல் ரீதியாக பிளவுபடக்கூடாது, பிரிந்தால் நாட்டில் முன்னேற்றத்தை காண முடியாது, கட்சி அரசியலை மறந்து முன்னேற வேண்டும் என தெரிவித்துள்ளார்.