Loading...
நல்லூர் சந்தியில் நீதிபதி இளஞ்செழியன் மற்றும் பொலிஸ் மெய்ப்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக வழக்கு தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்கு நீதிபதி இளஞ்செழியனுக்கு அழைப்பு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மேல் நீதிமன்றம் இந்த அழைப்பு கட்டளையை பிறப்பித்துள்ளது.
Loading...
இதன்படி நாளை(24.04.2024) புதன்கிழமை நீதிமன்றில் சாட்சியம் அளிக்க முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 22.07.2017 அன்று நல்லூர் சந்தியில் நீதிபதி இளஞ்செழியன் மற்றும் பொலிஸ் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Loading...