கோடை காலத்தில் வெயில் தீ போல் சுட்டெரித்தாலும் சீசனில் கிடைக்கக் கூடிய பழங்களும் , உணவு வகைகளும் ஒருபுறம் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும்.
அந்த வகையில் கோடையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது மாம்பழம்தான். இப்போது மாம்பழ சீசன் ஆரம்பமாகியிருக்கின்றது.
மாம்பழத்தை சாப்பிடும் முன் அவற்றை தண்ணீரில் ஊறவைத்து பின்னர் நன்றாக அலசி தான் சாப்பிட வேண்டும். இதற்கான காரணம் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏன் நீரில் ஊற வைக்க வேண்டும்?
பொதுவாக தற்காலத்தில் மாம்பழங்களை விரைவாக பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் இரசாயணங்கள் நோய் காரணிகளை உண்டாக்கும் கிருமிகள் போன்றவை அதன் தோல் பகுதியில் படிந்திருக்கும்.
அவ்வாறு தண்ணீரில் ஊறவைத்து கழுவி சாப்பிடுவதால் பல்வேறு ரசாயனங்கள் உடலினுள் செல்வதையும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளையும் தடுக்கலாம்.
மேலும் நம் உடலின் ஊட்டச்சத்தை குறைக்கும் ஃபைட்டிக் அமிலம் ஆபத்தானது. இது உடலுக்கு மிக முக்கியமான இரும்பு, துத்தநாகம் , கால்சியம் மற்றும் இன்னும் பிற தாதுக்களை குறைத்துவிடும் தன்மை கொண்டது.
இதனால் உடலில் தாதுப்பற்றாக்குறை உண்டாகும். இப்படி ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஃபைடிக் அமிலம் மாம்பழத்தில் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இது ஒரு சில பழங்கள், காய்கறிகள் மற்றும் கொட்டைகளிலும் இயற்கையாக காணப்படும் மூலக்கூறாக உள்ளது.
இந்த ஃபைடிக் அமிலம்தான் உடலின் வெப்பம் அதிகரிக்கச் செய்யும் மற்றுமொரு காரணமாகவும் இருக்கிறது. எனவே தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் இந்த ஃபைடிக் அமிலமானது அகலும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
மாம்பழத்தை நீரில் ஊற வைப்பதன் மூலம், மாம்பழத்தில் உள்ள தெர்மோஜெனிக் பண்புகள் குறையும். உடல் வெப்பம் அதிகரித்தால், அது மலச்சிக்கல், முகப்பரு, தலைவலி போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
உடல் சூட்டை கிளப்புதல்,செரிமாணப்பிரச்சனை, தலைவலி, குடல் வீக்கம் , மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கவும் இந்த முறை உதவுகிறது.
இதனால் மாம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் சில பக்கவிளைவுகளையும் தடுக்கப்படுகின்றது. பயிர்களை பாதுகாக்க பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளை இந்த முறையில் நீக்க முடியும்.
இதனால் நச்சுத்தன்மை அதிகம் கொண்ட பூச்சிக்கொல்லிகளால் உணவு ஒவ்வாமை, சுவாசக்குழாயில் எரிச்சல், வயிறு கோளாறு, தோல் எரிச்சல் போன்ற பக்கவிளைவுகளை தவிர்க்கலாம்.
அதுமட்டுமன்றி பைட்டோ கெமிக்கல் என்னும் பண்பு மாம்பழத்தில் அதிகமாக இருக்கின்றது. இது கொழுப்பை அதிகரிக்கிறது. மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைப்பதன் மூலம் அதன் செறிவை குறைத்து இயற்கையான கொழுப்பை குறைக்கவும் இந்த முறை துணைப்புரிகின்றது.