நாட்டில் தற்போது புதுமணத் தம்பதிகளிடையே விவாகரத்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையானது 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
அண்மைக்காலமாக திருமணம் செய்துகொள்ளும் மக்களிடையே இரண்டு மூன்று வருடங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் விவாகரத்து செய்யும் போக்கு காணப்படுவதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவு பிரிவின் சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்ஷிகா கணேபொல தெரிவித்துள்ளார்.
அத்தோடு மாவட்ட நீதிமன்றங்களில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேற்படி தகவலை அவர் வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பாக தம்பதியினரிடையேயான கருத்து முரண்பாடே விவாகரத்துக்கான முக்கிய காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.