ஒரு வெற்றிகரமான, செழிப்பான தொழிலை விட்டுவிட்டு சொந்தமாக தொழில் ஒன்றை தொடங்குவது என்பது ஒரு பெரிய சவால். ஆனால் இந்த சவாலை ஆஷ்கா கொராடியா(Aashka Goradia) வெற்றிகரமாக செய்துள்ளார்.
தொழில் முனைவோர் பயணத்தில் மேலும் சிறந்த வெற்றியை அடைய துணிச்சல், உறுதி மற்றும் தன்னம்பிக்கை தேவைப்படுகிறது. ஆஷ்கா கோரடியாவின் கதை இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
நடிகையிலிருந்து தொழில் முனைவோர் ஆக மாறிய பயணம்
பல சோப்பு ஒபேராக்களில் நடித்த பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான ஆஷ்கா கோரடியா, தனது வெற்றிகரமான நடிப்புத் துறையைக் கைவிட்ட பிறகு ஒரு தொழில்முனைவோர் பயணத்தை தொடங்கினார்.
2020 ஆம் ஆண்டில், அவரது கல்லூரி நண்பர்களான அஷுதோஷ் வாலானி மற்றும் பிரியங்க் ஷா ஆகியோருடன் இணைந்து ரெனீ காஸ்மெட்டிக்ஸ் (Renee Cosmetics) என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
இதன் நிறுவனம் பல ஆண்டுகளாக பல்வேறு அழகு சாதனப் பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில், நிறுவனம் ரூ.100 மில்லியன் டொலர் (approximately Rs 834 கோடி) என்ற மதிப்பை எட்டியது.
2024 நிதியாண்டில் ரூ.400 கோடி வருவாய் ஈட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளதாக ஆஷ்கா பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநரான கோரடியா, சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புடன் சேர்ந்து தயாரிப்புகளை நிர்வகிக்கிறார்.
அகமதாபாத்தில் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் இன்று அழகு சாதனப் பொருட்கள் துறையில் முன்னணி நிறுவனமாக உள்ளது.
நடிகை ஆஷ்கா கோரடியா
தனது நடிப்புத் தொழிலைப் பற்றி பேசுகையில், கோரடியா 2002 ஆம் ஆண்டில் ‘Achanak 37 Saal Baad’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முதன் முதலில் தோன்றினார்,
அங்கு அவர் ‘குசுமம்'(Kkusum) தொடரில் குமுத்(Kumud ) என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர், ஜீ டிவி, 9X, சோனி டிவி போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் நடித்து புகழ் பெற்றார்.
அவருடைய குறிப்பிடத்தக்க எதிர்மறை பாத்திரங்களுக்காக அவர் மிகவும் பிரபலமானார். பின்னர், ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கத் தொடங்கினார். அவரது கடைசி முக்கிய தோற்றம் 2019 ஆம் ஆண்டில் ‘Daayan’ என்ற தொடரில் இருந்தது.
ஆஷ்கா கோரடியாவின் கதை, தொழில்முனைவோர் துறையில் புதிய சாதனை படைப்பதற்கான உத்வேகமூட்டும் பயணமாகும்.