நுவரெலியா – கொட்டகலை நகரமானது தற்போது பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினரின் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொட்டகலை VC மைதானத்தில் இடம்பெறவுள்ள மே தின நிகழ்விற்கு ஜனாதிபதி வரவுள்ள நிலையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மைதானம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.
வழக்கமாக கொட்டகலை நகரின் வீதியின் இரு மருங்கிலும் பெருந்திரளான வாகனங்கள் நிறுத்தப்படும் போதும் தற்போது அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிகழ்வு ஏற்பாடுகள் போன்ற விடயங்களை ஜீவன் தொண்டமான் நேற்றைய தினம் மாலை பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் செயல்திறன் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடு