மனிதன் தன் பசியை கட்டுப்படுத்ததுவது தான் விரதமாகும். இது ஒ்வொரு மதங்களிலும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றது ஏன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
விரதம்
விரதம் இருப்பதால் அது பல நன்மைகளை தருகிறது. இதனால் சுய கட்டுப்பாடு மற்றும் தெய்வீகத்துடனான தொடர்பு போன்றவற்றை மேம்படுத்தும் ஒருவகையான ஆன்மீக ஒழுக்கத்தின் வடிவமாக விரதம் பார்க்கப்படுகிறது.
இந்துக்கள் பொதுவாக விரதம் இருப்பது வழக்கமான ஒரு விஷயமாக வைத்துள்ளனர். இவ்வாறு இருப்பதன் மூலம் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்துவதற்கு உதவுகிறது.
ஆன்மீகப் பயணத்தில் கவனம் செலுத்துவதற்கும், தெய்வீகத்தோடு ஆழ்ந்த தொடர்பு வைத்துக் கொள்வதற்கும் இது உதவுவதாக நம்பப்படுகிறது.
கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு முன்பிலிருந்து 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் விரதம் இருப்பது வழக்கம். இஸ்லாமியர்கள் வழக்கமாக ரம்ஜான் மாதத்தில் விரதம் இருப்பார்கள்.
அனைத்து வயது வந்த முஸ்லிம்களும் இந்த விரதம் இருப்பது கட்டாயமாக இஸ்லாமியத்தில் கருதப்படுகிறது.
இப்படி விரதம் இருக்கும் போது இவர்கள் உணவை மட்டும் அல்லாமல் தங்களுக்கு பிடித்த அனைத்து விஷயமும் அதாவது பானம், புகைப்பிடித்தல் மற்றும் தாம்பத்தியம் போன்றவற்றில் இருந்து விலகி இருப்பார்கள்.
இப்படி விரதம் இருப்பதால் உடலையும், ஆன்மாவையும் தூய்மைப்படுத்துகிறது. உணவு, தண்ணீர் அல்லது பிறவற்றிலிருந்து விலகி இருப்பதன் மூலமாக சுய கட்டுப்பாடு கிடைக்கிறது.