ஸ்மார்ட்போன் போட்டரி சார்ஜ் விரைவில் குறைந்துவிடாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
100 சதவீத பேட்டரி சார்ஜ் செய்தாலும் படிப்படியாக குறைந்து சீக்கிரம் ஆஃப் ஆகும் நிலை ஏற்பட்டால் இதற்கு நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் காரணம் என்பதை உணர்ந்து கொள்ளவும்.
இதனால் போனில் ஆயுட்காலமும் சீக்கிரம் முடிந்துவிடுமாம். ஆதலால் நீண்ட ஆயுளுடன் போனை வைத்துக்கொள்ள பேட்டரி சார்ஜ் போடும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஸ்மார்ட் போனை சார்ஜ் போடும் போது அதன் பேக் கேஸை கழற்றிவிட்டு போடுவது சிறந்தது. காரணம் சார்ஜ் செய்யும் போது உங்களது பேட்டரி வெப்பமடைந்து, அந்த வெப்பத்தை வெளியேற விடமால் குறித்த கேஸ் தடுக்கின்றது. இதனால் பேட்டரி சேதமடைய வாய்ப்புள்ளது.
சார்ஜ் போடும் போது பிளக்கை சரியான முறையில் கனெக்ட் செய்வது மிக முக்கியமாகும். ஏனெனில் பேட்டரிக்கு பவர் கூறுதலாகவே அல்லது குறைவாகவோ மின்சாரம் வந்தால் பேட்டரி பழுதடைந்துவிடும்.
அதே போன்று இரவு முழுவதும் போனை சார்ஜ் போடும் வழக்கம் இருந்தால் அதனை உடனே நிறுத்திவிடுங்கள். இதன் காரணமாகவும் பேட்டரி விரைவில் பழுதடைந்துவிடும்.
70,80 சதவீதம் சார்ஜ் இருக்கும் போது சார்ஜ் போடுவதை தவிர்த்து, 15, 20 சதவீதம் இருக்கும் சமயத்தில் சார்ஜ் போடுவது சிறந்தது.