இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் ஆதாம் பாலம் என்ற இடத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த கொடூர தாக்குதலில் கழுத்தில் குண்டு பாய்ந்து 21 வயதான பிரிட்ஜோ என்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், டிட்டோ என்வரும் படுகாயத்துடன் உயிர்தப்பியுள்ளார். இதையடுத்து, அப்பகுதியில் மீன் பிடித்து வந்த மீனவர்கள் ஆபத்தான நிலையில் கரை திரும்பினர்.
பலியான பிரிட்ஜோவின் உடல் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. காயமடைந்த டிட்டோ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று பார்வையிட்டார்.