கொமடி நடிகர் கிங் காங் மகள் 12ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அதிசய பிறவி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் கிங்காங்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவரை மக்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டார்கள்.
1990களில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்றவர்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார்.
கலா என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் கிங்காங் இளைய மகள் 12வது வகுப்பில் எடுத்துள்ள மதிப்பெண் இப்போது வெளியாகியுள்ளது.
அவரது முதல் மகள் கல்லூரி படிப்பை முடித்துள்ள நிலையில் இரண்டாவது மகள் 12வது வகுப்பில் 404 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார்.
தற்போது இந்த விவரம் வெளியாக கிங்காங்கிற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.