பச்சைக் கிழங்குகளில் அதிக நச்சுத்தன்மை உள்ளதால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பச்சை உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு நல்லது என்று நினைத்து தாய்மார்கள் பச்சைக் கிழங்குகளை தேடிப் பார்த்து வாங்குகிறார்கள் என்பது தவறான கருத்து என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க,
உருளைக்கிழங்கு முளைப்பதற்கு தயாராக இருப்பதாலோ அல்லது மண்ணில் இருப்பதாலோ அல்லது சேமிப்பின் போது சூரிய ஒளி படுவதனாலோ ஏற்படும் இரசாயன மாற்றத்தினால் உருளைக்கிழங்கு பச்சை நிறமாக மாறுவதாக அவர் தெரிவித்தார்.
உருளைக்கிழங்கு பச்சை நிறமாக மாறுவதற்கு முக்கிய காரணம், உருளைக்கிழங்கை சேதப்படுத்தும் பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு எதிராக solanine and chaconine எனப்படும் இயற்கை இரசாயனங்களால் கிளைகோல்கலாய்டுகளின் உற்பத்தி அதிகரிப்பாகும்.
இந்த பச்சை உருளைக்கிழங்கு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. கடை உரிமையாளர்களுக்கு இது நன்றாகவே தெரியும். கடை உரிமையாளர்கள் 10 கிலோ உருளைக்கிழங்கை ஒரு பையாக வாங்குகிறார்கள்.
அவர்களால் அந்த பைகளில் இருந்து அதனை தெரிவு செய்து எடுக்க முடியாது. மக்கள் ஒரு பை உருளைக்கிழங்கை வாங்கும்போது, அதன் அளவு சுமார் 700-1000 கிராமாகும்.