துருக்கி நாட்டின் இஸ்தான்புல் (İstanbul) விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட போது முன்பகுதி தரையுடன் மோதி தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையெனவும் விமான ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் துருக்கியின் (turkey ) போக்குவரத்து அமைச்சர் அப்துல்காதிர் கூறியுள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பெட்எக்ஸ் (FedEx) எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 767 விமானத்தின் முன் தரையிறங்கும் கியர் செயலிழந்துள்ளது.
இதனால், தரையிறங்கும் கியரை மட்டுமே பயன்படுத்தி தரையிறங்கியதால் விமானத்தின் முன்பகுதி தரையுடன் மோதி தீப்பொறி பறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான விமானத்தை அகற்றும் பணியின் போது விமானம் தரையிறங்கிய ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது சம்பந்தமான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🇹🇷 Un Boeing 767-300 de FedEx reliant Paris CDG à Istanbul a subi une avarie sur sa roulette de nez.
▫️Le train d’atterrissage avant du Boeing ne s’est pas déployé lors de l’approche à l’aéroport d’Istanbul.
Les pilotes ont posé l’avion sur le nez.
📷 Tango Down pic.twitter.com/3BgmV8vrfr
— air plus news (@airplusnews) May 8, 2024