சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் திருத்தங்களைச் செய்ய முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடன் வழங்கிய நாடுகள், இலங்கை அரசாங்கம் என்பன சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2033 ஆம் ஆண்டு வரையில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அவை தற்பொழுது பூர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் திருப்திக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு கட்சி இந்த உடன்படிக்கையை திருத்துவதாக கூறியுள்ளதாகவும், தேசிய மக்கள் சக்தி திருத்தம் செய்யப்போவதில்லை என கூறியுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.