250 ஆண்டுகள் பழமையான உலகின் மிகப்பெரிய ஆலமரம் குறித்த தகவல்.
மிகப்பெரிய ஆலமரம்
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தின் ஷிப்பூரில் ‘ஆச்சார்யா ஜெகதீஷ் சந்திரபோஸ் தாவரவியல் பூங்கா’ உள்ளது. இந்த பூங்காவில் தான் உலகின் மிகப்பெரிய ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரம் சுமார் 250 ஆண்டுகள் பழமையானது.
இதன் முக்கிய தண்டு 15.5 மீட்டர் (அல்லது 50 அடி) அகலம் கொண்டது. இந்த மரம் 486 மீட்டர் சுற்றளவிலும், 3.5 ஏக்கரில் பரவி உள்ளது. இதன் உயரம் 24.5 மீட்டர், கிட்டத்தட்ட மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியாவின் உயரம் ஆகும். மேலும், இந்த தாவரவியல் பூங்காவில் சால், சிமுல், தேக்கு, ஆலமரம், அஸ்வத்தா, மஹோகனி, கிராம்பு, ஜாதிக்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் உள்ளன.
பெயர் மாற்றம்
இந்த தோட்டத்திற்கு விக்டோரியா மகாராணியின் ஆட்சிக் காலத்தில் ‘ராயல் இந்தியன் பொட்டானிக்கல் கார்டன்’ என்று பெயரிடப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1963-ல் ‘இந்திய தாவரவியல் பூங்கா’ என்று அழைக்கப்பட்டது.
பின்னர் 2009-ல்தோட்டத்தின் பெயர் மீண்டும் மாற்றப்பட்டு, புகழ்பெற்ற விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திரபோஸின் பிறந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘ஆச்சார்யா ஜெகதீஷ் சந்திரபோஸ் தாவரவியல் பூங்கா’ என்று பெயரிடப்பட்டது.