தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் இருந்து அழைப்பு வந்தால் போவேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் சார்பில், மே 18 இனப்படுகொலை நாளையொட்டி இன எழுச்சி நாள் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “வாக்கு பெட்டிகள் வைத்திருக்கும் இடங்களில் எங்காவது சிசிடிவி பழுதானால் சரி,
ஆனால் பல இடங்களில் ஆகிறது என்றால் அதைப் பற்றி யோசிக்க வேண்டும். சவுக்கு சங்கர் பேசியது தவறு, அதனை மறுக்க முடியாது. குண்டாஸ், கஞ்சா வழக்கு எல்லாம் தவறு ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அவரது பேச்சுக்காக பெலிக்ஸ் என்ன செய்தார்.
I’m Waiting
அவரை கைது செய்வதில் என்ன நியாயம். கேப்டன் விஜயகாந்த் இருக்கும் போது அவருக்கு பத்ம பூஷண் விருது கொடுத்திருக்க வேண்டும். அதற்கு தகுதியான நபர் அவர். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் இருந்து அழைப்பு வந்தால் போவேன்.
நாட்டின் பிரச்னையே அண்ணனும், தம்பியும் சேர கூடாது என்பது தானே. விஜய்யும், நானும் சந்திப்பதில் என்ன பிரச்னை?” என்றார். மேலும், 2026-ல் விஜய்யுடன் இணைய வாய்ப்பு உள்ளதா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “விஜய் பாணியில் சொல்கிறேன் I’m Waiting” என்று தெரிவித்துள்ளார்.