வேப்ப மரத்தின் எல்லா பாகங்கள் பிரதானமாக மருத்துவத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. வேம்பு நீரின் நன்மைகளை அதன் தூள் அல்லது செறிவூட்டப்பட்ட பிற பொருட்களைக் கொண்டு பேஸ்ட் செய்வதன் மூலமும் பெற்றுக்கொள்ளலாம்.
எனவே தினசரி காலையில் வெறும் வயிற்றில் வேம்பு நீரை குடிப்பதால் அது உடலில் நன்மையை அள்ளித் தருகிறது. வேம்பு நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
வேம்பு நீர் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி ஆ நமது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இதை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.
இது கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உந்துகிறது. வேம்பு நீர் சக்தி வாய்ந்த பாக்டீரியா மற்றும் எதிர்ப்பு, பூஞ்சை மற்றும் வைரஸ் என்பவற்றை எதிர்த்து உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
இந்த வேம்பு நீர் இயற்கையாகவே செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால் செரிமான செயல்பாடு மேம்பட்டு குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.
இதனால் வயிற்றில் வீக்கம் அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பொதுவான குடல் சார்ந்த பிரச்சினைகளை தவிர்க்க முடியும். ஆரோக்கியமான மற்றும் பிரகாசிக்கும் சருமத்தை மேம்படுத்துவதில் வேம்பு நீர் மிகவும் புகழ்பெற்றது.
வேப்பிலையின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பரு, தழும்புகள் மற்றும் பிற தோல் பிரச்சனைகளை எதிர்த்து போராடி தெளிவான சருமத்திற்கு வழிவகுக்கும்.
இது ரத்தத்தை சுத்திகரிப்பதால், சருமத்தின் நிறத்தை அதிகரித்து இளமையான தோற்றத்தை ஊக்குவிக்கும். இது குடலில் குளுக்கோஸ் உறிஞ்சுதலை குறைத்து, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதை தவிர நீரிழிவு நோயை குணப்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக பராமரிப்பதற்கும் உதவுகிறது. வேம்பு நீர் பயன்படுத்தி வாய் கொப்பளிப்பதன் மூலம் வாய் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.
இதன் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், வாய் துர்நாற்றம், ஈறு நோய்கள், பல் தொற்று போன்றவற்றை குறைக்கிறது.