குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் அதிகமாக விரும்பி குடிக்கப்படும் பாலில் கலப்படம் செய்யப்பட்ட மற்றும் தரம் குறைந்த பாலை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நாம் பாலின் தரத்தை வீட்டிலேயே சில பரிசோதனைகளை செய்து பார்க்கலாம். ஒரு துளி பாலை எடுத்து பாலிஷான சாய்வான தரையில் விட வேண்டும்.
இது தூய்மையான பாலாக இருந்தால், பால் துளி அதேயிடத்தில் இருக்கும் அல்லது மெதுவாக வடியும். அதுவே தண்ணீர் கலந்த பால் என்றால், வேகமாக கீழே வடியும். ஏனென்றால் கலப்படமற்ற பாலில் பிசுபிசுப்பும் இழுவிசையும் அதிகமாக இருக்கும்.
இதை விட ஒரு கொஞ்சமாக பாலை எடுத்து கொதிக்க விட்டு ஆற வைத்து அயோடின் கரைசலை ஊற்றவும். கலப்படமற்ற பாலாக இருந்தால் நிறம் எதுவும் மாறாது அல்லது லேசாக மஞ்சள் நிறத்தில் மாறும்.
மாவுப்பண்டம் எதுவும் கலந்திருந்தால் பாலின் நிறம் நீலமாக மாறியிருக்கும். கண்ணாடி க்ளாஸில் 5 மில்லி பாலை எடுத்துக்கொள்ளுங்கள்.
அதேயளவு தண்ணீரை பாலில் சேர்க்கவும். பின்னர் இந்த கலவையை நன்றாக குலுக்க வேண்டும். பாலில் கலப்படம் இல்லையென்றால் நுரை எதுவும் வராது அல்லது லேசாக வரும்.
டிடர்ஜெண்ட் கலந்திருந்தால் பாலிலிருந்து நுரை பொங்கிக்கொண்டு வரும். இப்படி பாலில் பல பொருட்களை கலப்படம் செய்கிறார்கள் இதை நாம் கண்டறிவது மிகவும் முக்கியமாகும்.
பாலுக்கான தேவை மக்களிடம் அதிகமாக காணப்படுவதால் இதற்கு கலப்படம் செய்யப்படுவதும் அதிகமாக உள்ளது.