தவறான கமெண்டுகள் குறித்து நடிகை அனிகா மனம் திறந்துள்ளார்.
மலையாள சினிமாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்(18). தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம், நானும் ரவுடி தான், மிருதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து, அண்மையில் அனிகா முதன்முதலாக ஹீரோயினாக நடித்த ‘ஓ மை டார்லிங்’, புட்ட பொம்மா திரைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாக்கி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும், அதற்கு பல சர்ச்சை கமெண்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள அனிகா, சினிமாவில் நடிக்கக் கூடிய பெண்களுக்கும் ஆசைகள் இருக்கும். அவர்கள் கவர்ச்சியான உடை அணிவது என்பது தனிப்பட்ட விஷயம் மற்றும் விருப்பம். எப்போதும் ஸ்டைலாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கு தக்கவாறு உடைகளை அணிவார்கள்.
பெண்கள் எப்படிப்பட்ட உடல் அணிந்தாலும் அதற்கு விமர்சனம் செய்கிறார்கள்.அத்துடன் கண், காது, மூக்கு என தவறாக சித்தரித்து பேசுபவர்கள் என்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். நானும் ஒரு மனுஷி தானே எனக்கும் இது போன்ற ஆசைகள் இருக்காதா? என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.