ஜெயின் துறவிகள் குளிப்பதே இல்லை எனக் கூறப்படுகிறது.
ஜெயின் துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் தீட்சை எடுத்த பிறகு குளிக்கவே மாட்டார்கள். குளித்தால், நுண்ணுயிர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது அவர்களின் நம்பிக்கை.
எப்போதும் தங்கள் வாயில் ஒரு துணியை வைத்திருப்பார்கள். இதனால் எந்த நுண்ணுயிரிகளும் வாய் வழியாக உடலை அடையாது என நம்புகின்றனர். ஜெயின் துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் உள் குளியல் எடுக்கிறார்கள்.
தியானத்தில் அமர்ந்து உள் குளியல் எடுப்பதன் மூலம் மனதையும் எண்ணங்களையும் தூய்மைப்படுத்துகிறார்கள். குளிப்பது என்பது உணர்ச்சிகளைத் தூய்மைப்படுத்துவது என உறுதியாக இருக்கின்றனர். இதையே வாழ்நாள் முழுவதுமே கடைப்பிடிக்கின்றனர். சாதுக்கள் மற்றும் சாத்விகள் ஈரத்துணியை எடுத்து, சில நாட்களுக்குப் பிறகு உடலைத் துடைத்துக்கொள்கின்றனர்.
இதன் காரணமாக உடல் புத்துணர்ச்சியுடனும் தூய்மையுடனும் இருக்கும் என்கின்றனர். வெளிநாட்டில் வாழும் சமண துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் கூட இதே போன்ற கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்கின்றனர்.
அவர்களுக்கு ஜெயின் சமூகத்தால் தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படுகிறது. இல்லையெனில், சமணம் தொடர்புடைய கோயில்களுக்கு அருகில் உள்ள மடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.