பொதுவாக எல்லா விடயங்களளுக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் சில முறைகள் காணப்படுகின்றது. தற்காலத்தில் உழைக்கும் பணம் வாழ்க்கை செலவுகளுக்கு போதுமானதாக இருப்பதில்லை.
அதனால் வங்கிகளிலும் வட்டி வியாபாரம் செய்பவர்களிடமும் இன்னும் சொல்லப்போனால் யார் யார் கடன் கொடுப்பார்களோ அங்கெல்லாம் கடன் வாங்கிவிடுகின்றோம்.
அதனை திருப்பி செலுத்த முடியாமல் எப்போதும் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றீர்களா? கடன் சுமையை குறைத்து பணப்புழக்கம் அதிகரிக்க வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில், வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களும் சரியான திசையில் வைக்கப்பட்டால் மாத்திரமே வீட்டில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
அறிந்தோ அறியாமலோ முக்கியமான சில விடயங்கள் தவறான திசையில் வைக்கப்பட்டால் பல்வேறு துரதிர்ஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியதாக இருக்கும்.
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு திசைக்கும் தனித்தனி சிறப்பு காணப்படுகின்றது.
அந்த வகையில் வடக்கு திசை கடவுள்கள் வசிக்கும் திசை என கருதப்படுகின்றது. எனவே தான் வடக்கு திசை மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகின்றது.
முக்கியமாக செல்வத்தின் கடவுளான குபேரன் இந்த திசையில் இருப்பதாக நம்பப்படுகின்றது.எனவே, இந்த திசையில் இருக்கும் வாஸ்து தோஷங்களை நீக்கினால் வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் பெருகி செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் வடக்கு திசையில் கண்ணாடியை வைப்பதால் நேர்மறை ஆற்றல்கள் வீட்டை நோக்கி ஈர்க்கப்படும்.
சமையலறை வீட்டின் வடக்கு திசையில் அமைக்கப்பட்டால் வீட்டில் உணவு பொருட்களுக்கும் பணத்துக்கும் பஞ்சமே ஏற்படாது.
வீட்டின் பிரதான நுழைவாயில் வடக்கு திசையில் அமைக்கப்படுவது மங்களகரமானதாக பார்க்கப்படுகின்றது.
வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் மணி பிளாண்ட்க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
இதனை வடக்கு திசையில் வைத்தால் வீட்டில் கடன் தொல்லைகள் நீங்கி பணத்தை அதிகமாக சேமிக்க கூடியதாக இருக்கும்.
மேலும் துளசி செடியையும், வீட்டின் வடக்கு திசையில் வைத்தால், வீட்டில் மன அமைதி அதிகரிப்பதுடன் சிந்தனையில் தெளிவு பிறக்கும். பணவரவு அதிகரிக்கும்.
வடக்கு திசையில் குபேரன் வசிப்பதால் இந்த திசையில் குபேரனின் சிலையை வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.