பொதுவாகவே அனைவரும் அதிக சம்பளம் வழங்கும் வேலையில் அமர வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
அதிலும் பலர் உள்நாட்டில் பணிப்புரியாமல் வெளிநாட்டிற்கு சென்று விடுவார்கள். அந்தவகையில் வேலை ஆட்சேர்ப்புக்கு பல இடங்கள் உள்ளன.
உலகளவில் பல அழகிய தீவுகள் உள்ளன. அங்கு யாரும் வசிப்பதற்கு விரும்புவதில்லை. கோடை காலத்திற்கு சுற்றுலா செல்வதற்கு மட்டுமே பலரும் விரும்புவார்கள்.
ஆனால் நீங்கள் இந்த ஒரு தீவிற்கு சென்றால் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்று கூறினால் நம்புவீர்களா?
ஆம். அப்படிப்பட்ட ஓர் தீவு தான் தற்போது காணப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஸ்காட்லாந்தின் (Scotland) மேற்கு கடற்கரையில் உயிஸ்ட் மற்றும் பென்பெகுலா என்ற இரு தீவுகள் அமைந்துள்ளன.
அங்கு பணிப்புரிய விரும்புபவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.1.5 கோடி வழங்கப்படுகிறது. இந்த தீவில் 40 மக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர்.
இங்கு மருத்துவராக பணிப்புரிவதற்கு மட்டும் ஆண்டிற்கு ரூ.1 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. இது பிரித்தானியாவின் வைத்தியர்களை விட சுமார் 40% அதிகமாகும்.
இடமாற்ற உதவித்தொகையாக ரூ.8 லட்சமும், பணிக்கொடை ரூ.1.3 லட்சம், அலெவன்ஸ் ரூ.11 லட்சம் தனித்தனியாக வழங்கப்படும்.
மொத்தமாக ஒரு ஆண்டிற்கு ஒரு மருத்துவருக்கு ரூ.1.5 கோடி ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளை பெற வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை செய்தால் போதும்.
பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் கிராமப்புற மருத்துவத்தில் ஆரவம் கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமன்றி கடலோர பகுதிகளில் பணிபுரிந்த அனுபவமும் இருக்க வேண்டும்.
இங்கு பாடசாலை ஒன்றும் இருக்கிறது. இதில் மொத்தம் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட 5 மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.
இவர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவிக்கு ஆட்சேர்ப்பு காணப்படுகிறது.
இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 62 லட்சம் ஊதியம் வழங்கப்படும். இத்துடன் சுமார் ரூ.6 லட்சம் உதவித்தொகையும் வழங்கப்படும்.