சுவிட்சர்லாந்தில் இன்று மாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கிருந்த கட்டிடங்கள் தொடர்ந்து குலுங்கியுள்ளன. இந்நிலநடுக்கம் அளவு கோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாகவும், ஆனால் முதல்கட்டத்தகவல் படி 4.7 ஆக இருக்கவும் வாய்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் நாட்டின் முக்கிய நகரான Schwyz என்ற பகுதியில் இரவு 9.12 மணிக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது வடகிழக்கு பகுதியின் குலாஸ்பன்ஸ் பகுதிக்கு 6 கி.மீற்றர் தொலைவில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், எனினும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பால் பொலிசாருக்கு தொடர்ந்து தொலைபேசிகள் அழைப்புகள் வந்து கொண்டே இருப்பதாகவும், இதுவரை 20 முதல் 30 தொலைபேசி அழைப்புகள் வந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பொலிசார் கூறுகையில், தற்போதைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும், ஆனால் இரவில் நிச்சயம் பாதிப்பு அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.